Aran Sei

‘குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்குங்கள்; ஒன்றிய அமைச்சர்மீது நடவடிக்கை எடுங்கள்’- பிரதமருக்கு வருண் காந்தி கடிதம்

ங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க விவசாயிகள் கோரி வருகிறார்கள் என்றும் இந்த குறைந்த ஆதரவு விலையை உறுதி செய்யாமல் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட செய்ய மாட்டார்கள் என்றும் பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று(நவம்பர் 20), பிரதமர் மோடிக்கு வருண் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக நேற்று நீங்கள் அறிவித்தமைக்கு நன்றி. இந்த முடிவை முன்பே எடுத்திருந்தால், அப்பாவி விவசாயிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். லக்கிம்பூர் கெரி வன்முறை ஜனநாயகத்தின் மீதான களங்கம். இதற்கு காரணமானவர்கள் மீதும், இதில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க கோரி வருகிறார்கள். இந்த குறைந்த ஆதரவு விலையை உறுதி செய்யாமல் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட செய்யமாட்டார்கள். விவசாயிகள் மத்தியில் பரவலாக கோபம் உருவாகியுள்ளது, இது வேறு மாதிரியும் திரும்பும். அதனால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டரீதியான உரிமையை வழங்குவது முக்கியம். இதன் வழியாக, விவசாயிகளுக்கு பொருளதார ரீதியான பாதுகாப்பும் கிடைக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “நம்முடைய தேசத்தின் நலன் கருதி உடனடியாக விவசாயிகளின் இக்கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இந்தக் வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தாருக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கிட வேண்டும். அரசியல் நோக்கத்தோடு விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்” என்று பிரதமர் மோடிக்கு வருண் காந்தி கோரிக்கைகளை வைத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்