Aran Sei

‘நாட்டின் வளங்களை எல்லாம் தனியாருக்கு விற்று விட்டால் நாடு என்னவாகும்’? – பாஜக எம்.பி. வருண் காந்தி

னியார்மயம் என்ற பெயரில் நாட்டில் உள்ள எல்லா வளங்களும் விற்கப்படுகிறது என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று(ஜனவரி 5), இரண்டு நாள் சுற்றுப்பயணமாக உத்தரபிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்ற தொகுதியான பிலிபித்திற்கு வருகை தந்துள்ள வருண் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மக்களிடம் உரையாற்றியுள்ளார்.

அப்போது, “நம் நாடு கடினமான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வு உச்சத்தை தொட்டுவிட்டது. வேலையின்மை பெருகிவிட்டது. தனியார்மயம் என்ற பெயரில், நாட்டில் உள்ள எல்லா ஆதார வளங்களும் விற்கப்படுகிறது. யோசித்துப் பாருங்கள், எல்லாவற்றையும் விற்றுவிட்டால், நம் நாடு என்னவாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

பகலில் தேர்தல் பரப்புரை இரவில் ஊரடங்கு – உ.பி. பாஜக அரசுக்கு வருண் காந்தி கண்டனம்

“ஊழல் அரசியல் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இன்றைய அரசியல் சுயநலத்தாலும், ஊழலாலும் நிரம்பியுள்ளது. நேர்மையானவர்களை அரசியலுக்கு கொண்டுவாருங்கள். மக்களின் பிரச்சனைகளை தன் பிரச்சனையாக எண்ணி, அதை கலைப்பவர்களை உங்கள் தலைவராக தேர்ந்தெடுங்கள்” என்று அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்