Aran Sei

வாரணாசி: ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்த தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

வாரணாசி ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்தும் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.

உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதையடுத்து அங்கு களஆய்வு மேற்கொண்டு மே 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாரணாசி: காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள மசூதியில் நீதிமன்ற குழு ஆய்வு

மசூதிக்குள் படம்பிடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து வாரணாசி நீதிமன்றம் நேற்று விசாரித்தது. நீதிபதிகள் உத்தரவில், “மனுதாரர்கள் கேட்டபடி மசூதியின் உள்பகுதி, அடித்தளம் உட்பட அனைத்து இடங்களிலும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். களஆய்வுப் பணி மே 17-ம் தேதிக்குள் முடிவடைய வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இந்தநிலையில் கியான்வாபி மசூதி வளாகத்தின் களஆய்வுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி அஞ்சுமன் இன்டெஜாமியா மஜித் கமிட்டி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தற்போதைய நிலையில் இருக்க உத்தரவிடக் கோரி இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் ஹுசெபா அஹமதி இந்த விஷயத்தை முன் வைத்தார்.

சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது; காந்தியைக் கொன்றவர்களை கொண்டாடுகிறது பாஜக – சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஆனால் ஆவணங்களைப் பார்க்காததால், பிரச்சினை என்னவென்று தங்களுக்கு தெரியாது என்று கூறி இடைக்கால தடை விதிக்க பெஞ்ச் மறுத்துவிட்டது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில் ‘‘நாங்கள் ஆவணங்களை பார்க்கவில்லை. என்ன விஷயம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த விவரம் தெரியாமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். நான் எப்படி ஒரு உத்தரவை அனுப்புவது. ஆவணங்களை படித்து பார்த்த பின்பு மட்டுமே உத்ரதவு பிறப்பிக்க முடியும். அதேசமயம் இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க தயார்’’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மஜித் கமிட்டி சார்பில் ஆஜரான அஹமதி, ‘‘வாரணாசி சொத்துகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் உள்ளது. தற்போது ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும்’’ எனக் தெரிவித்துள்ளார்.

Source: indianexpress

சீமான் போல சிந்தித்த ராஜபக்சே திவாலான இலங்கை | Nathan Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்