Aran Sei

கவிஞர் வரவர ராவின் மருத்துவ பிணை பிப்ரவரி 5 வரை நீட்டிப்பு – மும்பை உயர் நீதிமன்றம்

ல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் தற்போது மருத்துவ பிணையில் உள்ளார். இந்நிலையில் அவரின் மருத்துவ பிணையை பிப்ரவரி 5 ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தெலங்கானாவைச் சேர்ந்த கவிஞர் வரவர ராவ் கைது செய்யப்படும்போது அவருக்கு 78 வயது. அப்போதே அவருக்கு வயது மூப்பு காரணமாக, சில உடல் உபாதைகள் இருந்துள்ளன. பீமா கோரேகான்  வழக்கில் கைது செய்யப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 16 செயற்பாட்டாளர்களுள், வரவர ராவும் ஒருவர்.

மகாராஷ்டிரா முழுவதும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, 80 வயதை கடந்த கவிஞர் வரவர ராவ் போன்ற சமூக ஆர்வலர்களை மீண்டும் சிறைக்கு அனுப்புவது நல்ல முடிவல்ல என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆகவே வரவர ராவ் சரணடையும் தேதியை ஒரு வாரம் மட்டுமே நீட்டிக்க வேண்டும் என்ற தேசிய புலனாய்வு அமைப்பின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், பிப்ரவரி 22 அன்று, வரவர ராவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, நிபந்தனைகளுடன் கூடிய ஆறு மாதத்திற்கான பிணையை வழங்கி, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வரவர ராவ் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

2021 செப்டம்பர் 5 இல் வரவர ராவின் மருத்துவ ஜாமீன் முடிவடைந்தது. மேலும் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரது மருத்துவ ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய புலனாய்வு அமைப்பு வரவர ராவின் பிணை தொடர்ந்து நீட்டிக்கப்படுவதை எதிர்த்து வருகிறது.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்