Aran Sei

சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்கும் உத்தரபிரதேச பழங்குடி கிராமம்

ந்திய சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக, உத்தரபிரதேச பழங்குடிகளான வந்தாங்கியாக்கள் பஞ்சாயத்து தேர்தலில் வாக்களித்து, தங்கள் கிராமத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளார்கள்.

உத்தரபிரதேச மாநில பஞ்சாயத்து தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குபதிவு ஏப்ரல் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.

கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர், மகாராஜ்கஞ்ச், கோண்டா மற்றும் பால்ராம்பூர் மாவட்டங்களில் உள்ள அடர்ந்த காடுகளில் வந்தாங்கியா பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். கோரக்பூர், கோண்டா மற்றும் பால்ராம்பூர் மாவட்டத்தில் தலா ஐந்து வந்தாங்கியா பழங்குடி கிராமங்களும், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் 18 பழங்குடி கிராமங்களும் உள்ளன. 2017-ம் ஆண்டு, இந்த கிராமங்கள் வருவாய் கிராமங்களாக மாறின.

ஊரடங்கு தந்த பரிசு – வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் பழங்குடிகள்

“இந்தத் தேர்தல் அவர்களுக்கான உண்மையான அதிகாரத்தை அளிக்கும்.” என்று ஒரு சமூக ஆர்வலர் மனோஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோரக்பூர் மாவட்ட வந்தாங்கியா கிராமத்தில் நடக்கவுள்ள முதற்கட்ட வாக்குபதிவில் 3,500 க்கும் மேற்பட்ட பழங்குடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இதற்கு முன்பே, 2019-ம் ஆண்டு நடந்த உத்தரபிரதேச பொதுத்தேர்தலில் முதன்முறையாக அவர்கள் வாக்களித்திருந்தாலும், பஞ்சாயத்து தேர்தல் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக உள்ளது.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்