Aran Sei

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு நான் எதிர்ப்பா? வதந்திகளை நம்ப வேண்டாம் – ஓ.பன்னீர்செல்வம்

Image Credits: The Week

ன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகச் சமூகவலைதளங்களில் வரும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் தொடர்ச்சியாக வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி அவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குமாறு பாமக போராடி வருகிறது. 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற இடஒதுக்கீடு தொடர்பான போராட்டித்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் சுட்டுக்கொல்லப் பட்டனர். இந்நிலையில் கடந்த டிடம்பர் மாதம் வன்னியர்களுக்கன இடஒதுகீட்டை வலியுறுத்தி வடதமிழகம் முழுதும் பாமகவினரால் போராட்டம் நடத்தப்பட்டது.  போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென்று தமிழக அரசு அறிவித்து, அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பதாக, சமூக வலைதளங்களில் சிலர் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், “வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாகச் சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை சில விஷமிகள் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“வன்னிய சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு நான் இது வரையிலும் நம்பிக்கைக்கு உரியவனாகவே இருந்திருக்கிறேன். இனிவரும் காலங்களிலும் நமது சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்” எனவும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்டர் பக்கத்தில்தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்