Aran Sei

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு தற்காலிகமான ஏற்பாடு – ஒபிஎஸ்: கடும் கண்டனம் தெரிவித்த ராமதாஸ்: அதிமுக கூட்டணியில் குழப்பமா?

ன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு ‘தற்காலிகமான ஏற்பாடு’ என்று சமூக நீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறி வருகின்றனர் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தை மருத்துவர் ராமதாஸ் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சமீபத்தில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் தி இந்து ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

அந்தப் பேட்டியில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக முன் வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஒ.பன்னீர்செல்வம், “வன்னியர்கள் உள்ஒதுக்கீடு கோரிக்கையை முன் வைப்பதற்கு முன்பே சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்கக் கோரி வலியுறுத்தியிருந்தனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஒரு சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்க, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அந்தச் சமூகத்தில் தற்போது இருக்கும் மக்கள்தொகைக்கு ஏற்றவாறே இடஒதுக்கீட்டை வழங்க முடியும்” என்று கூறியிருந்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற பிரார்த்தனை – திண்டுக்கல் கோவிலில் வீரப்பனின் மனைவி பூஜை

”இடஒதுக்கீடு வழங்கும்பொழுது பழைய கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்துத் தர இயலாது. வன்னியர் சமூகத்தின் பிரதிநிதிகளுடம் இந்தச் சட்டரீதியான விஷயங்களை நானும் முதல்வரும் எடுத்துக் கூறினோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அந்தச் சமூகத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வழங்கப்படும் இடஒதுக்கீடு தான் நிரந்தரமானது. இது (10.5% இடஒதுக்கீடு) ஒரு தற்காலிமான ஏற்பாடே ஆகும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு தான், இறுதியான,நிரந்தரமான உத்தரவு வெளியிடப்படும். சாதி எண்ணிக்கையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் சதவீதம் அதிகரிக்கவோ குறையவோ செய்யலாம்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

’பாமகவின் முதல்வர் வேட்பாளரை ராமதாஸ்தான் அறிவிப்பார்’ – பாமக தலைவர் ஜி.கே.மணி

இந்நிலையில், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானது தான் என்று சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறி வருகின்றனர்; வன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது!” என்று கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாசிடம் கேள்வியெழுப்பிய பத்திரிகையாளரை மிரட்டிய பாமக தொண்டர்கள்

”கடந்த ஆண்டில் தொடங்கி இந்த ஆண்டின் தொடக்கம் வரை நடத்தப்பட்ட அறப்போராட்டங்களின் பயனாகவும் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் கடந்த மாதம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதற்குத் தமிழக ஆளுனரும் ஒப்புதல் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து வன்னியர்கள் 10.5% இட ஒதுக்கீட்டுச் சட்டம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக போராட்டம் – முடங்கியது சென்னைப் புறநகர்ப் போக்குவரத்துச் சாலைகள்

”சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமான சட்டம் தான். சட்டத்தில் தற்காலிக சட்டம் என்று ஒன்று கிடையாது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், அதற்கு மாற்றாக மற்றொரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் வரை நீடிக்கும். இது தான் நடைமுறையாகும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரயில் மறிப்பு, கற்கள் வீச்சு – தொடங்கியது பாமக இடஒதுக்கீடு போராட்டம்

”முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் சற்று முன் நான் தொலைபேசியில் பேசிய போதும் கூட, வன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானது தான். சட்டங்களில் தற்காலிக சட்டம் எதுவும் இல்லை என்பதை அவர் உறுதி செய்தார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்