Aran Sei

‘மக்கள் நம்பிக்கையோடு எதிர்நோக்கும் நல்லாட்சியை ஸ்டாலின் வழங்குவார்’ – ஸ்டாலினை சந்தித்து வாழ்த்திய கவிஞர் வைரமுத்து

மிழகம் மக்கள் நம்பிக்கையோடு எதிர்நோக்கும் நல்லாட்சியை ஸ்டாலின் வழங்குவார் என்று கவிஞர் வைரமுத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று (மே 2), நன்பகல் திமுக தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டில், கவிஞர் வைரமுத்து சந்தித்து பேசியுள்ளார். பின்னர், வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று அவருக்கு வாழ்த்து சொல்ல வந்தேன். தமிழகத்தில் நம்பிக்கை மிக்க, மக்களுக்கு நன்மை தர தக்க ஆட்சியை அவர் கொடுப்பார் என்ற நம்பிக்கையை அவருக்குத் தெரிவித்தேன். ஸ்டாலின் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாவும் இருக்கிறார்.” என்று கூறியுள்ளார்.

“இந்தத் தேர்தல் தமிழ் மக்களுக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் – ஸ்டாலின்

மேலும், “நீண்ட கால நிர்வாக அனுபவம், ராஜதந்திரம், தேர்சியான ஆட்சி அமைக்கும் யுக்தி, வித்தையைக் கற்றுகொடுக்கும் என்பது எனது நம்பிக்கை. தமிழகம் மக்கள் நம்பிக்கையோடு எதிர்நோக்கும் நல்லாட்சியை ஸ்டாலின் வழங்குவார். வழங்க வேண்டும்.” என்று கவிஞர் வைரமுத்து நம்பிக்கையோடு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்