Aran Sei

‘ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்தும் தி பேம்லி மேன் 2 இந்தித் தொடரை தடை செய்க’ – ஒன்றிய அரசுக்கு வைகோ கடிதம்

மேசான் ஓடிடி தளத்தில் தி பேம்லி மேன் 2 தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அத்தொடரின் ஒளிபரப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 23), செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ எழுதிய கடிதத்தில், ”தி பேம்லி மேன் 2 என்ற இந்தித் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்தக் கடிதத்தை எழுதி இருக்கின்றேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்தத் தொடரின் முன்னோட்டக்காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றது. தமிழர்களைப் பயங்கரவாதிகளாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கின்றார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெஸ்லா எனும் மாமனிதனும், எடிசன் என்ற சூழ்ச்சிக்காரனும் – கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

“ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகக் காட்சிகள் இருக்கின்றன. இத்தகையக்காட்சிகளைக் கொண்ட இந்தத் தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. எனவே இந்தத் தொடரை எதிர்த்துத் தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமேசான் ஓடிடி தளத்தில் இந்தத் தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் என்றும் தி பேம்லி மேன் 2 தொடர் ஒளிபரப்பைத் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று தன் கடிதத்தில் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமானவைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்