Aran Sei

‘ஏழு பேரையும் விடுதலை செய்து தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்க வேண்டும்’ – முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திமுக வலியுறுத்தி வருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 10) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது.” என்று தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

எழுவர் விடுதலை விவகாரம்: கூட்டாட்சி உரிமையை மறுத்துள்ள மத்திய அரசு – ஜெயராணி

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தும், ஆளுநர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார் என்று வைகோ தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்தி வந்தனர்.” என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எழுவர் விடுதலை: ‘கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய கோருவது நியாயம் இல்லை; விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சி வென்றதில்லை’ – காங்கிரஸ்

“ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திமுக வலியுறுத்தி வருகிறது. எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின்  ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து, கோடானு கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்கும் வேண்டும்.” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்