Aran Sei

திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் – வைகோ கோரிக்கை

திருச்சி பெல் ஆலையின் மேலாண்மைக் கோளாறுகளால், ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை இயக்கப்படாமல் உள்ளது என்றும் எனவே, தமிழக அரசு, திருச்சி பெல் ஆலையில், ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL), மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்கூடம் நல்ல முறையில் இயங்கி வந்தது. பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது.” என்று தெரிவித்துள்ளார்.

“எக்காரணத்திற்காகவும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது” – தொடங்கியது மக்கள் போராட்டம்

“அங்கே, 8 மணி நேரத்தில், 1000 கியூபிக் மீட்டர், அதாவது 150 உருளைகள் ஆக்சிஜன் உருவாக்கும் திறன் கொண்டது. ஒரு நாளைக்கு மூன்று வேலை நேரங்களில் குறைந்தது 400 உருளைகள் உயிர்க்காற்று ஆக்க முடியும். அவ்வாறு கிடைத்த ஆக்சிஜன், 2016 ஆம் ஆண்டு வரை, திருச்சி பெல் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.” என்று வைகோ தனது அறிக்கையில் நினைவூட்டியுள்ளார்.

பெல் ஆலையின் மேலாண்மைக் கோளாறுகளால், ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை ஆக்சிஜன் தொழிற்கூடம் இயக்கப்படாமல் உள்ளது என்றும் எனவே, தமிழக அரசு, திருச்சி பெல் ஆலையில், இந்த தொழிற்கூடத்தை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்