Aran Sei

கொங்குநாடு விவகாரம் : ‘நன்றாக இருக்கும் தமிழ்நாட்டை ஏன் பிரிக்க வேண்டும்?’ – வடிவேலு கேள்வி

ன்றாக இருக்கும் தமிழ் நாட்டை ஏன் பிரிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (ஜூலை 14), முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், நடிகர் வடிவேலு சந்தித்துள்ளார். அப்போது, கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், தமிழ்நாட்டில் உள்ள கொங்கு மண்டலத்தைக் கொங்கு நாடு என பிரித்து, தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று சில பேச்சுகள் எழுந்துள்ளதே, அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த வடிவேலு, “ராம்நாடு, ஒரத்தநாடு என நாடு எங்கிற பெயரில் பல இருக்கிறது. எல்லாத்தையும் தமிழ்நாட்டில் இருந்து பிரிக்க முடியாது. நன்றாக இருக்கும் தமிழ்நாட்டை ஏன் பிரிக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “நான் அரசியல் பேசவில்லை. அது வேண்டாம். இவற்றையெல்லாம் கேட்கும்போது தலையே சுற்றுகிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்