Aran Sei

கொள்முதல் செய்யப்பட்டதை விட அதிக தடுப்பூசிகளை விநியோகம் செய்ததா ஒன்றிய அரசு? – ஆர்டிஐ கேள்விக்கு அளித்த பதிலில் முரண்பாடு

கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளைவிட 6.95 கோடி அதிக தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் லோகேஷ் பத்ராவின் கேள்விக்கு இந்திய ஒன்றிய அரசு இவ்வாறு முரண்பாடான பதிலை அளித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் லோகேஷ் பத்ரா கேட்ட மூன்று கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பதிலளித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள்- தடுப்பூசிகள் குறைந்த அளவிலேயே செயலாற்றுமென வல்லுநர்கள் எச்சரிக்கை

இந்தப் பதில்களை பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (பிஐபி) மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்களுடன் ஒப்பிட்டத்தில், ”விநியோகிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை இடையே 6.95 கோடி அளவில் வேறுபாடு இருக்கிறது” என பத்ரா கூறியுள்ளார்.

சுகாதாரம் மற்றும் சமூக நல அமைச்சகம் அளித்த 3 பதில்களிலும் பொதுவானதாக, “ஆரம்பத்தில், அரசாங்கம் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரித்த  கோவில்ஷீல்ட் தடுப்பூசியின் 5.6 கோடி டோஸ்களை தலா ரூ. 210 (ரூ. 200 + 5% ஜி.எஸ்.டி) வீதம் கொள்முதல் செய்தது. அதே போல பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் 1 கோடி டோஸ்களை தலா ரூ. 309.75 (ரூ. 295 +5% ஜிஎஸ்டி) வீதம் கொள்முதல் செய்யது) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வுமனு – மகாராஷ்டிரா மாநில அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரை

ஒன்றிய அரசின் தகவல்களின்படி மே 3 ஆம் தேதிவரையில், பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதியின் கீழ் 6.6 கோடி (5.6 கோடி கோவிஷீல்ட் +1 கோடி கோவாக்சின்) தடுப்பூசி டோஸ்களும், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்த நிதியின் கீழ் 9.63 கோடி (8.745 கோடி கோவிஷீல்ட் + 88.5 லட்சம் கோவாக்சின்) தடுப்பூசி டோஸ்கள் என மொத்தம் 16.23 கோடி (6.6 கோடி + 9.63 கோடி)டோஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வெளியிறவுத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி மே 2 ஆம் தேதிவரை, 16.54 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 6.64 கோடி டோஸ்கள் 95 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசு மொத்தமாக வழங்கிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை 23.18 கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது அல்லது விநியோகம் செய்துள்ளது.

ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

மொத்தமாக 16.23 கோடி டோஸ்களை மட்டுமே கொள்முதல் செய்த ஒன்றிய அரசு, எவ்வாறு 23.18 கோடி தடுப்பூசிகளை விநியோகம் செய்தது. 6.95 கோடி தடுப்பூசிகள் எங்கிருந்து வந்தது என லோகேஷ் பத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

Source : Wire.in

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்