Aran Sei

‘கொரோனாவில் இருந்து இந்தியா மீள தடுப்பு மருந்து ஒன்றே நிரந்தர தீர்வு’ – அமெரிக்கா அதிபருக்கான மருத்துவ ஆலோசகர்

ந்தியா கொரோனா தொற்றில் இருந்து மீள கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுவது மட்டுமே நிரந்தர தீர்வு என்று அமெரிக்கா அதிபருக்கான முதன்மை மருத்துவ ஆலோசகர் அந்தோணி பாவுசி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்துமீதான காப்புரிமைக்கு விலக்கு- அமெரிக்காவை தொடர்ந்து ஜரோப்பிய ஓன்றியம் ஆதரவு

மேலும், கொரோனா தொற்றை எதிர்கொள்ள உள்நாடு மற்றும் வெளிநாடுகளில்  கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமெனவும் அதுமட்டுமல்லாது, இந்தியா கடந்த ஆண்டு சீனா உருவாக்கியதை போல தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டுமெனவும் அந்தோணி பாவுசி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளுக்கான அறிவுசார் சொத்துரிமை தள்ளுபடி – நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட அமெரிக்கா

இந்தியாவில் நிலவும் குறைபாடுகள் குறித்து அவர் கூறுகையில்,  “மருத்துவமனைகளில் இடமில்லாது மக்களை தெருக்களில் நிறுத்திவிடமுடியாது. இதே போன்று ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதும் மிகுந்த அபாயகரமான சூழல் தான். மக்கள் ஆக்சிஜன் இன்றி மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியத் தடுப்பூசியான கோவிஷில்ட் தயாரிப்பிற்கு மூலப்பொருட்கள் வழங்கத்தடை – அமெரிக்கா அரசு அறிவிப்பு

மேலும்,  “கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒருவழியென்றால், ஊரடங்கு பிறப்பிப்பது போன்ற இதர வழிகளும் உள்ளன. நான் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு பரிந்துரை செய்கிறேன். ஏற்கனவே பல இந்திய மாநிலங்கள் அதைச் செய்துள்ளன என்று நான் நம்புகிறேன். ஆனால் நீங்கள் நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டுமானால் அதற்கான வழிகளில் ஒன்று ஊரடங்கு.” என்று மருத்துவ நிபுணர் அந்தோணி பாவுசி பரிந்துரைத்துள்ளார்.

Source : New Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்