Aran Sei

‘கைதிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்’ – ஒடிசா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

திவு செய்ய உரிய ஆவணங்கள் இல்லை என்று எந்தவொரு கைதிக்கும் கொரோனா தடுப்பூசி மறுக்கப்பட கூடாது என்று ஒடிசா உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள துணை சிறைகள், மாவட்ட சிறைகள், சிறப்பு சிறைகள், சிறப்பு துணை சிறைகள், திறந்தவெளி சிறைகள் மற்றும் பெண்களுக்கான சிறைகள் உள்ளிட்ட மாநில சிறைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இரண்டு பொதுநல மனுக்கள் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைக்கு எதிராக மனு – தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி, தடுப்பூசி நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

நேற்று (ஏப்ரல் 27), இவ்வழக்குகள் நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக முன்பதிவு செய்யப் பெரும்பாலான கைதிகளுக்கு அடையாள ஆவணங்கள் இல்லை என்று அரசு சார்பில் வாதிடப்பட்டதுள்ளது.

அதைத்தொடர்ந்து, பதிவு செய்ய உரிய ஆவணங்கள் இல்லை என்று எந்தவொரு கைதிக்கும் கொரோனா தடுப்பூசி மறுக்கப்பட கூடாது என்று ஒடிசா உயர் நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்