பாலியல்வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு முன்ஜாமின் வழங்கியுள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.
பாலியல்வன்கொடுமை : “உடனடி நடவடிக்கை வேண்டும்” – உள்துறை அமைச்சகம்
ஜுட் லோபோ என்பவர் மீது டெல்லியை சேர்ந்த பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில், மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்ணின் விருப்பமின்றி பாலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையே – டெல்லி நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கில் லோபோவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் , ‘2009 ஆண்டு ஜுட் லோபோ பாலியல்வன்கொடுமையில் ஈடுபட்டார் என்று 2020 ஆம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது ‘ என்று மனுவில் அந்தப் பெண் தெரிவித்துள்ளதாக லைவ் லா செய்தி கூறியுள்ளது.
மேலும் ,உண்மையில் குற்றம்சுமத்திய பெண், ஜுட் லோபோவின் விடுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுமதி கேட்டதாகவும், ஆனால் கொரோனவினால் அவர் மறுத்தநிலையில் இவ்வாறு ஜோடித்து வழக்கு பதிந்துள்ளார் ” என்று கூறியுள்ளதாகவும் லைவ் லா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு ஜுட் லோபோவிற்கு முன்ஜாமீன் அளித்துள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.