உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் அகர்வால் , கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன் மகன் இறந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனை மீது காவல்துறை புகார் பதிவு செய்ய மறுப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், கடந்த ஏப்ரல் 26 அன்று, தன் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அன்றைய தினமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 26 காலை தன் மகனுக்கு ஆக்சிஜன் அளவு 94 இருந்ததாகவும், சீரான உடல்நிலையில் இருந்ததாகவும், இந்நிலையில் மாலை தன் மகனுக்கு உடல்நிலை சரியில்லை, ஆக்சிஜன் அளவு குறைகிறது என்று மருத்துவர்கள் கூறியிருந்தாகவும், அப்போது வெளியிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர் தயார் செய்தநிலையிலும் அதை மருத்துவமனை ஏற்க மறுத்ததாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி – வழக்கு பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை
இந்நிலையில், அவரது மகன் உயிரிழந்ததாகவும், இதுகுறித்து ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்க மறுத்த மருத்துவமனைமீது ஒரு மாதமாக புகார் அளிக்க முயன்றும் காவல்துறை முதல்தகவல் அறிக்கை பதிவு செய்வில்லை என்றும் ராஜ்குமார் அகர்வால் கூறியுள்ளதாக அந்த செய்தியில் கூறியுள்ளது.
மேலும், அவர் மகன் இறந்த அன்று, அந்த மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுகுறித்து முதலமைச்சர், மாவட்ட நீதிபதி, காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் தெரிவித்தும் இதுவரை புகார் பதியப்படவில்லை என்று பாஜகவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.