Aran Sei

மகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் குறித்து புகார் கொடுத்த தந்தை சுட்டுக்கொலை – உத்தர பிரதேசத்தில் பயங்கரம்

த்தரபிரதேச மாநிலம் சசனி பகுதியில், தன் மகள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மீது புகார் கொடுத்த தந்தையை, கடந்த திங்கள் (மார்ச் 1) அன்று, புகார் தெரிவிக்கப்பட்ட நபர் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை நேற்று, காவல்துறை கைது செய்திருப்பதாகவும், மற்ற மூவரை தேடிக்கொண்டிருப்பதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான கௌரவ் ஷர்மாவும் , அவரது மூன்று கூட்டாளிகளும் அந்த பெண்ணின் தந்தை வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்து துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றதாகவும், அந்த சமயம் அவரது மனைவியும் மகளும் அவருக்கு உணவு எடுத்து வர சென்றிருந்தனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உ.பியில் கொல்லப்பட்ட தலித் சிறுமி – பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என காவல்துறை தகவல்

இந்த கொலையில் குற்றம்சாட்டப்பட்ட கௌரவ் ஷர்மா 2018 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டவரின் மகளின் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் வெளிவந்தவர் என்று தி இந்திய எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹத்ராஸ் பகுதியின் காவல் கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வால், இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லலித் ஷர்மாவை கைது செய்திருப்பதாகவும் , ரோஹிதாஷ் ஷர்மா மற்றும் நிக்ஹில் ஷர்மா விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், கடந்த திங்கள் 3.30 மணியளவில் தானும் தனது அம்மாவும் தந்தைக்கு உணவு எடுக்க சென்ற போது வெள்ளை காரில் ஆயுதங்களுடன் அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த கௌரவ் ஷர்மா, லலித் ஷர்மா,ரோஹிதாஷ் ஷர்மா, நிக்ஹில் ஷர்மா ஆகிய நான்குபேரும், துப்பாக்கிகளைக் காட்டி தனது தந்தையிடம், பாலியல் சீண்டல் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று மிரட்டியதாக அந்தப் பெண் தெரிவித்திருப்பதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், தன் தந்தை அவர்களுக்கு எதுவும் பதிலளிக்காததால் ஆத்திரத்தில் அவரை அவர்கள் சுட்டதாகவும், என் தந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு உடனடியாக தூக்கி சென்ற பொது அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என்றும் அவரது மகள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த, அபய் சிங் ரத்தோர் என்ற பத்திரிகையாளர், பாதிக்கப்பட்ட பெண் நீதி கேட்ட கதறி அழும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிரிந்துள்ளார்.

எனக்கு நீதி வேண்டும்
எனக்கு நீதி வேண்டும்
என் ஊரை சேர்ந்தவன் தான்
என்னை கிண்டல் பண்ணினான்.
அந்த பொறுக்கி மேல எங்கப்பா புகார் கொடுத்தார்
அவன் கோபப்பட்டு எங்கப்பாவ துப்பாக்கியால சுட்டுட்டான்.
எங்கப்பாவ சுட்டுட்டான்.
6-7 பேரு இருந்தாங்க,
எங்கப்பாவ இங்கே (தலையில்) சுட்டுட்டாங்க
இங்கே (மார்பில்) சுட்டுட்டாங்க
இங்கே (இடுப்பில்) சுட்டுட்டாங்க
இங்கே (இடுப்பில்) சுட்டிருக்கலாமே
இங்கே (தலையில்) ஏன் சுட்டான்
ஏற்கனவே அவன் மேல வழக்கு போயிட்டிருக்குது.

(அந்தப் பெண் பேசுவதின் சாரம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்