உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தடுக்க ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்ட உயர்நீதிமன்ற முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவ வசதி போதாமைகளை கருத்தில் கொண்டு லக்னோ, பிரயாக்ராஜ், வாரணாசி, கான்பூர் மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களில் வரும் ஏப்ரல் 26 வரை ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மத விழாக்கள், கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை இயங்க தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக என்.டி.டி.வி செய்தி கூறுகிறது.
சுற்றித்திரியும் பசுகளுக்கு 20 பாதுகாப்பு முகாம் – 12 கோடி ஒதுக்கிய உத்தரப்பிரதேச அரசு
இந்நிலையில், யோகி ஆதித்யாநாத் ஆளும் உத்தரபிரதேச அரசு, மக்களின் உயிரையும் வாழ்வையும் பாதுகாக்கும் என்று கூறி நேற்று மாலை ஊரடங்கை நடைமுறைப்படுத்த மறுத்திருந்ததாக அந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் 30,000க்கும் அதிகமானோர் புதிதாகக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.