Aran Sei

நில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை?

த்தரபிரதேச மாநிலத்தில் ராமர் கோவில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய மூத்தப் பத்திரிக்கையாளர் மற்றும் இருவர் மீது போலிக் குற்றச்சாட்டு சுமத்தியதாகக் கூறி  புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர் தாக்கப்படும் காணொளி: சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை ஸ்வாரா பாஸ்கர் மீது புகார்

இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷம்பத் ராய், ராமர் கோவில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளராகவும், விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவராகவும் உள்ளார். இந்த குற்றச்சாட்டு மட்டுமல்லாது சிலநாட்களுக்கு முன்னர் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிலநாட்களுக்கு முன்னர் மூத்தப்பத்திரிக்கையாளர் வீனீத் நரேன், ஷம்பத் ராயின் தம்பி நில அபகரிப்பில் ஈடுபட வழிவகுத்துக் கொடுத்ததாகவும், அல்கா லாஹோத்தி என்பவருக்கு சொந்தமான மாட்டுத் தொழுவம் இருந்த 20,000 ஏக்கர் நிலத்தை ராயின் தம்பி பன்சல் ராய் அபகரித்ததாகவும் குற்றம்சாட்டி அவரது முகநூலில் பதிவிட்டிருந்ததாகவும் தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை

இந்நிலையில், ஷம்பத் ராயின் சகோதரர் பன்சல் ராய் அளித்த புகாரின் கீழ் பத்திரிக்கையாளர் வீனீத் நரேன், நில உரிமையாளர் லாஹோத்தி உட்பட மூவர் மீது தகவல் தொழிற்நுட்பச் சட்டம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாகவும்அந்த  செய்தி தெரிவிக்கிறது.

எனினும் இதுகுறித்து தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர் வீனீத் நரேன், நில உரிமையார் லாஹோத்தியிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையிலேயே குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும்தி வயர்  செய்தி கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்