Aran Sei

பிரதமரின் வருகைக்கு உத்தரகாண்ட் அர்ச்சகர்கள் எதிர்ப்பு: தீர்வு காண டெல்லி விரையும் முதலமைச்சர் தலைமையிலான பாஜக குழு

த்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடியின் அனுமதிக்க மாட்டோம் என்று சார் தாம் கோவில் அர்ச்சகர்கள் எச்சரித்ததையடுத்து, இதுகுறித்து ஆலோசணை நடத்த உத்தரகாண்ட் மாநில பாஜக அரசின் உயர்மட்டக் குழு டெல்லி சென்றுள்ளது.

2019 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட சார் தாம் தேவஸ்தானம் போர்டு சட்டத்திற்கு எதிராக அர்ச்சகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பே தங்களின் பாரம்பரிய உரிமைகள் பறிக்கப்படுவதாக உள்ளது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, அம்மாநில பாஜக தலைவர் மதன் கவுசிக் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர், “அர்ச்சகர்களின் இந்த போராட்டம் அரசையும், மாநில கட்சித் தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதை எண்ணி, பாஜக தலைவர்கள் பயப்படுகிறார்கள். அவர்கள்உடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்(நவம்பர் 1), கேதார்நாத் கோவிலில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அர்ச்சகர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டது. இந்த எதிர்ப்பானது மிகவும் வலுவாக இருந்ததால், திரிவேந்திர சிங் ராவத் கோவிலை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் நவம்பர் 5-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்று(நவம்பர் 2), மாலை, பத்ரிநாத் கோவிலில் இருந்து அர்ச்சகர்களை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சந்தித்து, சட்டம் தொடர்பாக விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்