Aran Sei

ஹோலிக்கு வண்ணப்பொடியை வீசி விளையாடிய சிறுமி – தரை அழுக்காவதாக துப்பாக்கியால் சுட்ட வீட்டின் உரிமையாளர்

த்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் பகுதியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது வண்ணப்பொடியை தவறுதலாகத் தரையில் கொட்டி கறையை உண்டாக்கிய 5 வயது சிறுமியை அந்த வீட்டின் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கியால் சூடப்பட்ட அந்தச் சிறுமியின் தந்தை, துப்பாக்கியால் சூட்டவரின் வீட்டில் பணியாளராக இருந்து வருகிறார்.

மருத்துவமனையில் பணம் செலுத்த தாமதம்: அறுவை சிகிச்சை காயங்களை தைக்காமல் விட்ட மருத்துவர்கள்- சிறுமி பலி

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது காஞ்சன் என்ற அந்தச் சிறுமி தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் வண்ணப்பொடியைத் தவறுதலாக வீட்டின் தரையில் கொட்டியுள்ளார்.

பீகாரில் தீயிட்டு சிறுமி தற்கொலை முயற்சி – தொடர் பாலியல் சீண்டலுக்கு உள்ளான அவலம்

இந்நிலையில் தரையில் ஏற்பட்ட கறையை பார்த்துக் கோபமடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் காஞ்சன்னை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமி தற்போது சீரான உடல்நலத்தோடு உள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அம்மாநில காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

SOURCE : THE NEW INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்