Aran Sei

உத்தரகண்ட் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 51 கோவில்கள் விடுவிப்பு – தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைக்க அரசு முடிவு

உத்தரகண்ட் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 51 கோவில்களை அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து அம்மாநில முதலமைச்சர் திரந் சிங் ராவத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள உத்தரகண்ட் முதலமைச்சர் திரந் சிங் ராவத், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 51 கோவில்களை தேவஸ்தான நிர்வாகத்திடம் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு பாஸ்போர்ட், அரசு வேலை கிடைக்காது – புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள பீகார், உத்தரகண்ட் காவல்துறை


இந்நிலையில், இமயமலை பகுதியில் உள்ள முக்கிய புனித தலங்களான கங்கோத்திரி, யமுனோத்திரி, பத்திரிநாத், கேதார்நாத் உட்பட 51 கோவில்கள் தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இதுவரை 8 பெண்கள் மட்டுமே தலைமை நீதிபதிகள் – நீதிமன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவதை உறுதிப்படுத்த வேண்டி மனு

இதுகுறித்த மசோதாவை திரந் சிங் ராவத் உத்தரகண்ட் சட்டசபையில் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த மசோதாவிற்கு அம்மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியா ஒப்புதல் அளித்துள்ளார்.

source;NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்