Aran Sei

உத்தரகாண்ட் கும்பமேளாவில் காவல் துறைக்கு ஆள் பற்றாக்குறை – உதவக்கோரி ஆர்எஸ்எஸுக்கு கடிதம்

த்தரகாண்ட் ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளுக்கும், அம்மாநில காவல்துறையில் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறையை சரி செய்ய,  தங்களுக்கு உதவக் கோரி, ஆர்எஸ்எஸ் மற்றும் காங்கிரஸ் சேவா தளத்திற்கு அம்மாநில காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

இரு அமைப்புகளின் மாநில தலைவர்களுக்கு கும்பமேளா விழா நடைபெறும் ஹரித்வார் பகுதிக்கான காவல்துறை தலைவர் சஞ்சய் குஞ்யால் கடிதம் எழுதியுளளார்.

அக்கடிதத்தில், “மகாகும்பமேளா நாட்டின் மிக முக்கியமான மத விழாக்களில் ஒன்று. தற்போதைய சூழலில் எங்களுக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு உதவியையும் ஏற்க தயாராக உள்ளோம். கடந்த காலங்களில் இரு அமைப்புகளும் செய்த பாராட்டத்தக்க மக்கள் நலப் பணிகளின் அடிப்படையில்தான் இந்த உதவியை கோருகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று: ‘கிரிக்கெட்டுக்கு அனுமதியில்லை, லட்சக்கணக்கானோர் கூடும் கும்பமேளாவுக்கும் அனுமதியா?’ – திக்விஜய் சிங் கேள்வி

கடந்த ஆண்டு, ஜூன் மாதம் உத்தரகாண்ட் மாநில வனத்துறை தனது செயல்திட்டங்களில் ஆர்எஸ்எஸ்ஸையும் சேர்க்க உத்தரவு பிறப்பித்திருந்தது. பாஜக தலைமையிலான உத்தரகாண்ட் அரசின் இம்முடிவிற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன.

கும்பமேளாவுக்கு வருகை தரும் பல பக்தர்கள் தங்களது கொரோனா தொற்று சோதனை சான்றிதழைக் கொண்டு வருவதில்லை என்று உள்ளூர் ரயில் நிலையத்தில் கார்வால் மாவட்ட ஆணையர் ரவிநாத் ராமன் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்