Aran Sei

உத்தரகண்ட் பாஜகவில் உட்கட்சி பூசல்: அமைச்சர்,எம்.எல்.ஏ ராஜினாமா – பலத்தை இழக்கும் பாஜக

த்தரகண்ட் வனத்துறை அமைச்சர் ஹரக் சிங் ராவத், அம்மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததோடு, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

தற்போது வரை ஹரக் சிங் ராவத் தனது ராஜினாமாவை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை. ஆனால், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர், பல ஆண்டுகளாக கோட்வாரில் மருத்துவக் கல்லூரி அமைக்க கோரியும் மாநில அரசு இழுத்தடிப்பதாகவும் பாஜகவில் தான் மோசமாக நடத்தப்பட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

2016-ல் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த ஹரக் சிங் ராவத், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹரக் சிங் ராவத்துடன் காங்கிரஸில் இருந்து விலகிய மற்றொரு பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான உமேஷ் சர்மா காவும் கட்சியை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் மாநில கமிட்டிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்துக்கும் இடையேயான மோதலாலும், ஹரிஷ் ராவத்திற்கு எதிராக உருவாகியுள்ள உட்கட்சி பிரிவினராலும், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரகண்ட் சட்டப்பேரவை தேர்தல் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றெண்ணிய பாஜகவிற்கு  ஹரக் சிங் ராவத்தின் முடிவு ஒரு சறுக்கலாக பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு எதிரான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் இந்த ஓராண்டில் மட்டும் மூன்று முதலமைச்சர்களை பாஜக மாற்றியுள்ளது.

ஹரக் சிங் ராவத் மற்றும் உமேஷ் சர்மா காவ் ஆகியோர் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ப்ரீதம் சிங்குடன் தொடர்பில் இருக்கின்றனர் என்றும் விரைவில் காங்கிரஸ் கட்சியின் இணையலாம் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்