Aran Sei

” சார் தாம் யாத்திரையை இன்னொரு கும்பமேளாவாக அனுமதிக்க முடியாது ” – உத்தரகாண்ட் நீதிமன்றம் கண்டிப்பு

டுத்த மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கவிருக்கும்  ‘சார் தாம் யாத்ரா’ என்ற புனித யாத்திரை, மற்றொரு கும்பமேளா நிகழ்வாக மாற அனுமதிக்க முடியாது என்று உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் கண்டித்து கூறியதையடுத்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, யாத்திரைக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா, உத்திரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில், பல லட்கணக்கணக்கான மக்கள் கும்பமேளாவில் பங்கேற்று வருகின்றனர்.

கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், கும்பமேளாவில் பங்கேற்க வந்த சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இன்னும் பலருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கின்றன என்று ஹரித்வார் சுகாதாரத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

கும்பமேளாவை தொடர்ந்து சார் தாம் புனித யாத்திரைக்கு அனுமதி: கொரோனாவை அலட்சியப்படுத்துகிறதா உத்தரகாண்ட் அரசு?

இந்நிலையில், அடுத்த மாதம் 14-ம் தேதி, உத்தரகாண்டில் சார் தாம் யாத்திரை நடைபெறவுள்ளது.

ஆண்டுதோறும் கோடைகாலத்தில், உத்தரகாண்ட்டில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு இந்து மதத்தினர் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அது ’சார் தாம் யாத்ரா’ என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் தீவிரமாக பரவிவரும் கொரோனா குறித்து சமர்பிக்கப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம், மே 14-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள சார் தாம் யாத்திரைக்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு மாநில அரசை கோரியுள்ளது.

‘கும்பமேளா சென்றவர்கள் கொரோனாவை பிரசாதமாக மக்களுக்கு வழங்கக்கூடாது’ – மும்பை மேயர் எச்சரிக்கை

சார் தாம் யாத்திரையை நிர்வகிக்கும் சார் தாம் தேவஸ்தானம் வாரியத்தின் தலைவர் ரவீநாத் ராமன், “யாத்திரைக்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும். நாங்கள் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, அதன்படி முடிவு எடுப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான ’சார் தாம்’ புனித யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்கள், கொரோனா தொற்றில்லா சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியிருந்தது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்