Aran Sei

உத்தராகாண்ட் தேர்தல் – பாஜகவை தோற்கடிக்க களமிரங்கும் பூசாரிகள்

சார்தாம் தேசஸ்தான மேலாண்மை வாரியம் அமைக்க இருப்பதாக பாஜக அறிவித்த்தையடுத்து உத்தராகண்ட் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 15 இடங்களில் போட்டியிட போவதாக சார்தாம் கோயில் பூசாரிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

உத்தராகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி,யமுனோத்ரி ஆகிய 4 கோயில்கள் சார்தாம் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கோயில்களுடன் தொடர்புடைய 51 கோயில்களை நிர்வகிப்பதற்கான தேவஸ்தான வாரிய சட்டம் 2 ஆண்டுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தேவஸ்தான வாரியம் அமைக்க உத்தராகண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

வாரியம் அமைப்பதால் கோயில்களில் தங்கள் பாரம்பரியமான உரிமை பறிக்கப்படுகிறது. எனவே, கோயில் வாரியத்தை திரும்ப பெறவேண்டும் என்று பூசாரிகள் வலியுறுத்துகின்றனர்.

தேவஸ்தான வாரியம் அமைக்கும் பாஜக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சட்டமன்ற தேர்தலில் 15 பேர் முதலில் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்று தீர்த்த புரோகித் (பூசாரி) சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான சார்தாம் தீர்த்த புரோஹித் ஹக் ஹகூக்தாரி மகாபஞ்சாயத்தின் தலைவர் கிருஷ்ண காந்த் கோதியால் வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

“இந்தச் சட்டத்தை பாஜக அரசு திரும்பப் பெறவில்லை என்றால், நாங்கள் எங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம். எதிர்க்கட்சிகளுடன் பேசி, இந்தத் தொகுதிகளில் போட்டியிட வேண்டாம் என்று அவர்களை சமாதானப்படுத்துவோம். பாஜகவுடன் நேரடியாகப் போட்டியிட்டு அவர்களை தோற்கடிக்க விரும்புகிறோம்” என்று கிருஷ்ண காந்த் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்