Aran Sei

உத்தரகண்ட்: திருமண ஊர்வலத்தில் குதிரையில் வந்ததற்காக தலித் மணமகனுக்கு கொலை மிரட்டல் – தொடரும் அவலம்

த்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தின் போது தலித் மணமகனை குதிரையில் இருந்து கீழே இறங்கும்படி வற்புறுத்திய சம்பவத்தை விசாரிக்க அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் மே 2ஆம் தேதி நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, அல்மோரா மாவட்டத்தின் தல தாரியல் என்ற கிராமத்தில் வசிக்கும் மணமகனின் தந்தை தர்ஷன் லால், மே 3ஆம் தேதி மாஜிஸ்திரேட்டிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அப்புகாரில், தனது கிராமத்தைச் சேர்ந்த சிலர் தனது மகன் விக்ரம் குமாரின் திருமண ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதாகவும், தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் குதிரையில் இருந்து இறங்குமாறு வற்புறுத்தியதாகவும் தர்ஷன் லால் கூறியுள்ளனர்.

குஜராத்தில் குதிரை ஏறியதற்காக தாக்கப்பட்ட தலித் மணமகன் – 28 பேர் மீது வழக்குப்பதிவு

 

“எனது மகனை குதிரையில் இருந்து கீழே இறங்காவிட்டால் கொன்று விடுவதாக கிராம மக்கள் மிரட்டினர். என்மீது சாதிரீதியிலான அவதூறுகளையும் பேசினர்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மணமகனுடைய தந்தையின் புகாரின் பேரில், ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகள் 504 (வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அல்மோரா மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது

Source: Hindustan Times

நான் ஆந்திரா போகணுமா? I சீமான் ஒரு எட்டப்பன் I Kamatchi Naidu

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்