Aran Sei

உத்தரகண்ட்: பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம் – முதலமைச்சர் தகவல்

த்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முதல் படி எடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

பொது நிகழ்ச்சி ஒன்றில் நேற்று (ஏப்ரல் 14) உரையாற்றியுள்ள  புஷ்கர் சிங் தாமி, அரசியலமைப்பின் 44வது பிரிவின்படி, அனைத்து குடிமக்களுக்கும் பொது சிவில் சட்டம் உள்ளது என்று கூறியுள்ளார்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தரகாண்ட் பாஜக அரசு முடிவு: இந்துத்துவ சட்டத்தை திணிக்கும் சதியென எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

“தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில், எங்கள் அமைச்சரவையின் முதல் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்கான குழுவை அமைப்பதற்கான முன்மொழிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். சட்டத்தை உருவாக்கும் முன்னர், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட அக்குழு அனைவரின் கருத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நாம் எல்லைகளை இரு நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதால், நமக்கு பொது சிவில் சட்டம் தேவை. உத்தரகண்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர் இராணுவத்தில் உள்ளனர். உத்தரகண்ட் மாநிலமானது கலாச்சாரம் மற்றும் ஆன்மீக மையமாகவும் உள்ளது” என்று பாஜகவைச் சேர்ந்த உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

Source: PTI

இது அரபி குத்து இல்ல சங்கி குத்து — பீஸ்ட் திரைப்படத்தின் விமர்சனம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்