Aran Sei

‘வலுப்படும் பாஜகவின் பெண்விரோத, ஆணாதிக்க சிந்தனை’ – பெண்களின் ஜீன்ஸ் தொடர்பாக பாஜக முதல்வருக்கு கண்டனம்

image credit : hindustantimes.com

புதிதாக பதவியேற்றுள்ள உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்தின், கிழிந்த மாடல் ஜீன்ஸ் அணிந்த பெண்களை பற்றிய விமர்சனத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

நேற்று முன்தினம் (மார்ச் 16), உத்தரகாண்ட் மாநில தலைநகர் டெஹ்ராடூனில், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கம் ஒன்றில் பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, தனது விமான பயணத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விவரித்த முதல்வர் ராவத், இரண்டு குழந்தைகளையுடைய ஒரு பெண் கிழிந்த மாடல் ஜீன்ஸ் அணிந்திருப்பதைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார்.

“மோடி எதிர்காலத்தில் வழிபடப்படுவார் ” – மோடியை ராமனுடன் ஒப்பிட்டு துதிபாடிய மாநில முதல்வர்

மேலும், அப்பெண்ணால் எப்படி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், இவர்களைப் போன்ற ஒரு பெண் தனது குழந்தைகளுக்கும் இச்சமூகத்திற்கும் என்ன மாதிரியான செய்தியை அளிப்பார்கள் என்று ஆச்சரியமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ராவத்தின் இக்கருத்து குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அகில இந்திய மகிலா காங்கிரஸ்,  “மிஸ்டர் பாஜக உத்தரகாண்ட் முதல்வரே, அச்செய்தி உங்கள் பார்வையில்தான் உள்ளதேயன்றி, பெண்கள் அணியும் ஜீன்ஸில் அல்ல” என்று விமர்சித்துள்ளது.

மஹிலா காங்கிரஸின் தேசிய செயலாளர் ஆயிஷ்வர்யா மகாதேவ் வெளியிட்ட அறிக்கையில்,  “உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்தின் கருத்தின் வழியாக, பாஜக தனது பெண்விரோத, ஆணாதிக்க மற்றும் அடக்குமுறை மனநிலையை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது. தீரத் சிங் ராவத், தன்னுடைய தலைவரான பிரதமர் மோடியைப் பின்பற்றுகிறார்.” என்று கூறியுள்ளார்.

“பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் இனி உரக்க பேசுவார்கள்” – பிரியா ரமணி

காங்கிரஸ் தலைவர் கரிமா தசௌனி ​​தனது ட்வீட்டில், “முதல்வராக இருப்பதால் ராவத்துக்கு, யாருடைய வாழ்க்கை முறையை பற்றியும் கருத்து தெரிவிக்கும் உரிமை வழங்கப்படவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை வாக்கில் டிவிட்டரில் #rippedjeans என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தா, “எங்கள் ஆடைகளை மாற்றுவதற்கு முன்பு மனப்போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால், இங்கு அதிர்ச்சியளிக்கும் ஒரே விஷயம் இது போன்ற கருத்துக்கள் சமூகத்துக்கு சொல்லும் செய்திதான்” என்று இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ளார்.

தான் கிழிந்த ஜீன்ஸ் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், “நான் என்னுடைய கிழிந்த ஜீன்ஸை போட்டுக் கொள்வேன், நன்றி. நான் அவற்றை பெருமையுடன் போட்டுக் கொள்வேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்