Aran Sei

மத்திய அரசின் மானியம் அதிகம் பெற அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் – உத்தரகாண்ட் முதல்வர் சர்ச்சை பேச்சு

த்திய அரசின் உணவு தானியங்களை அதிக அளவில் பெற விரும்பும் ஏழைக் குடும்பங்கள், 20 குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் பரவல் தொடங்கியதை அடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், பலர் உணவின்றி தவித்தனர். இதனையடுத்து, பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை மத்திய அரசு விநியோகித்தது, ஒரு வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோ உணவு தானியங்களும் ஒரு கிலோ பருப்பு வகைகளும் வழங்கப்பட்டது.

‘இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்ட அமெரிக்கா’ : மீண்டும் சர்ச்சைக்கு உள்ளான பாஜக முதல்வர்

இந்நிலையில், இதுதொடர்பாக, நேற்று (மார்ச் 21) ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் , “வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும்  ஐந்து கிலோ ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட்டது. ஒரு வீட்டில் 10 பேர் இருந்தால் 50 கிலோவும் 20 பேர் இருந்தால் 100 கிலோவும் கொடுக்கப்பட்டது. ஆனால், இரண்டு பேருக்கு 10 கிலோ ரேஷன் வழங்கியதைக் கண்டும், 20 பேருக்கு 100 கிலோ வழங்கியதைக் கண்டும் சிலர் பொறாமைப்படுகிறார்கள். ஏன்? நீங்கள் இரண்டு பேரை மட்டுமே பெற்றெடுத்தீர்கள். ஏன் 20 பேரைப் பெற்றெடுக்கவில்லை?” என்று தீரத் சிங் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில், பெண்கள் அணியும் கிழிந்த மாடல் ஜீன்ஸ் குறித்த கருத்தால் சர்ச்சைகளுக்கு உள்ளான உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், நேற்று (மார்ச் 21) இந்தியாவை அமேரிக்கா 200 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக  தெரிவித்து மீண்டும் சர்ச்சைக்கு உள்ளானார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்