அண்மையில், பெண்கள் அணியும் கிழிந்த மாடல் ஜீன்ஸ் குறித்த கருத்தால் சர்ச்சைகளுக்கு உள்ளான, பாஜகவை சேர்ந்த உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், இந்தியாவை அமேரிக்கா 200 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக தெரிவித்துள்ளார்.
நேற்று (மார்ச் 21), அவர் காணொளி வழியாக ஆற்றிய உரையில், “200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி, உலகம் முழுவதையும் ஆண்ட அமெரிக்கா, கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த போராடி வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் இந்தியா சிறப்பாகவே செயல்படுகிறது.” என்று கூறியுள்ளார்.
#WATCH "…As opposed to other countries, India is doing better in terms of handling #COVID19 crisis. America, who enslaved us for 200 years and ruled the world, is struggling in current times," says Uttarakhand CM Tirath Singh Rawat pic.twitter.com/gHa9n33W2O
— ANI (@ANI) March 21, 2021
சுகாதாரத் துறையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 50 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்று இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்றும் அவர்கள் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மோடி எதிர்காலத்தில் வழிபடப்படுவார் ” – மோடியை ராமனுடன் ஒப்பிட்டு துதிபாடிய மாநில முதல்வர்
மேலும், “இத்தருணத்தில் நரேந்திர மோடிக்கு பதிலாக வேறு ஒருவர் பிரதமராக இருந்திருந்தால் இந்தியாவுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்றே தெரியவில்லை. நாம் மோசமான நிலையில் இருந்திருப்போம். ஆனால், அவர் (பிரதமர்) நமக்கு நிவாரணத்தை அளித்துள்ளார்.” என்று தீரத் சிங் ராவத் கூறினார்.
Source : ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.