Aran Sei

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும்: உத்திரகண்ட் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

Credit: The Indian Express

த்திரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக குழு அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

மார்ச் 23 அன்று உத்திரகண்ட்டில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில், இன்று (மார்ச் 24) நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பிறகு பேசிய உத்திரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, “பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட நிபுணர்கள் கொண்ட குழுவை விரைவில் அமைக்க அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது” என கூறியுள்ளார்.

அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே பொது சிவில் சட்டம் குறித்து முடிவு எடுத்துள்ளதென் வழியாக தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்ற தொடங்கியுள்ளது.

உத்திரகண்ட சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான பிப்ரவரி14 அன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த புஷ்கர் சிங் தாமி, “பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மூத்த குடிமக்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் அறிவுஜீவிகள் கொண்ட குழு அமைக்கப்படும்” என உறுதியளித்திருந்தார்.

Source: The Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்