Aran Sei

பாஜக ஆளும் உத்தரகாண்டில் அமலாகும் மதமாற்ற தடைச்சட்டம் – மாநில முதலமைச்சர் உறுதி

த்தரகாண்ட் மாநிலத்தில் லவ் ஜிகாத் பரவுவது கவலையளிப்பதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 9), உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்துத்துவ அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) தலைவர்களுடனான கலந்துரையாடலில் தீரத் சிங் ராவத் பேசியுள்ளார்.

`லவ் ஜிகாத் தடைச் சட்டம் நீதியை மீறும் செயல்’ – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

அப்போது, “அண்மையில் லவ் ஜிகாத் விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் பேசினேன். மாநிலத்தில் லவ் ஜிகாத் வழக்குகள் குறைவாகவே இருக்கின்றன. உத்தரகாண்ட் ‘தேவபூமி’ (தெய்வங்களின் பூமி). ஞானிகளின் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ள பூமி. ஆகவே லவ் ஜிகாத் இங்கு அதிகம் இல்லை. ஆனால், குறிப்பிட்ட அளவு இருக்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “இது குறித்து என்னுடைய கவலைகளை நான் வெளிப்படுத்தியுள்ளேன்.  நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, லவ் ஜிகாத் தொடர்பாக எல்லா மாவட்டங்களின் தரவுகளையும் வாங்கினேன். நிச்சயமாக நான் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன்.” என்று தீரத் சிங் ராவத் கூறியுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம்: மூன்றாவது மாநிலமாக குஜராத்தில் நிறைவேறியது

த்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தும் மூன்றாவது மாநிலமாக அண்மையில் குஜராத் மாநில ஆகியது. இவர்களைத் தொடர்ந்து, ஹரியானா மற்றும் கர்நாடக மாநில அரசுகளும், இதே போன்ற ஒரு சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை வழங்கியுள்ளன.

உத்தரகாண்ட் உட்பட இந்த ஆறு மாநிலங்களும் பாஜகவின் ஆட்சியின் கீழ் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்