Aran Sei

ஹரித்வார் நகராட்சி பகுதிகள் – இறைச்சிக் கூடங்கள் அற்ற பகுதிகளாக பாஜக அரசு அறிவிப்பு

த்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி அமைப்பு பகுதிகளையும் இறைச்சிக் கூடங்கள் அற்ற பகுதிகளாக அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது.

இறைச்சிக் கூடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதிகளையும் ரத்து செய்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் இரண்டு மாநகராட்சிகளும் இரண்டு நகராட்சிகளும் ஐந்து டவுன் பஞ்சாயத்துகளும் உள்ளன. விரைவில், ஹரித்வாரில் கும்பமேளா விழா நடைபெறவுள்ள நிலையில், நகர்ப்புற வளர்ச்சித்துறையிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்

ஹரித்வார் போன்ற மதவழிபாட்டு நகரத்தில் இறைச்சிக் கூடங்களை அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஹரித்வார் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள லக்சர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பாஜகவை சேர்ந்த குப்தா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம்  பேசியபோது, “மங்களூர் நகராட்சியில் இறைச்சிக் கூடம் திறக்கப்படப்போவது குறித்து எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர். அந்த இறைச்சிக்கூடத்திற்கான உரிமம் முந்தைய காங்கிரஸ் அரசால் வழங்கப்பட்டது. தினசரி 550 கால்நடைகளை இறைச்சிகளாக மாற்றும் திறன் கொண்ட அக்கூடமானது, விரைவில் செயல்படத் தொடங்க இருந்தது. ஆனால் இப்போது அதன் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இப்போது ஹரித்வாரின் எந்தப் பகுதியிலும் இறைச்சிக் கூடம் இல்லை.” என்று கூறியுள்ளார்.

விவசாயிகளை பாதிக்கும் பசு வதை தடுப்புச் சட்டம் – அமைதிக்கு காரணம் சாதியப் படிநிலையே

உத்தரகாண்ட் மாநில கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகாராஜ், ஹரித்வாரில் உள்ள இறைச்சி கூடங்களை மூடுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நேற்று (மார்ச் 3) இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள சத்பால் மகாராஜ், “ஹரித்வார் கடவுளின் உறைவிடம். நாங்கள் இங்கு புனித கும்பமேளா விழாவை கொண்டாடுவோம். தினமும் 500 மாடுகளை இறைச்சிகளாக்கும் திறன் கொண்ட ஒரு இறைச்சிக் கூடம் ஹரித்வாரில் திறக்கப்படவிருந்தது. இதை உடனே நிறுத்துமாறு நான் முதல்வரிடம் கோரினேன். அவர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இப்போது ஹரித்வாரின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும். இனி ஹரித்வார் வளர்ச்சியடையும்.” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்