Aran Sei

கழுதை சாணத்தைப் பயன்படுத்தி போலி மசாலா – இந்து யுவ வாஹினி மண்டல பொறுப்பாளர் கைது

உத்தர பிரதேச மாநிலத்தில் கழுதை சாணம் மற்றும் அமிலத்தைப் கலப்படம் செய்து உள்ளூர் மசாலா நிறுவனங்களின் பெயரில் போலி மசாலா பொருட்களை தயாரிக்கும் உற்பத்திப் பிரிவை (Unit) ஹத்ராஸ் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் என நேஷனல் ஹெரல்ட் செய்திவெளியிட்டுள்ளது.

ஹத்ராஸ் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நவிப்பூர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உ.பி., அரசுக்கு பயந்து டெல்லியில் அடைக்கலம் தேடிய காதல் ஜோடி – பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

அந்த உற்பத்திப் பிரிவின் (Unit) உரிமையாளர் அனூப் வர்ஷ்னி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்து யுவா வாகினி அமைப்பின் மண்டல பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார் என நேஷனல் ஹெரால்ட் தெரிவித்துள்ளது. இந்து யுவா வாகினி, கடந்த 2002-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் தொடங்கப்பட்ட, இந்து தேசியவாத இளைஞர் அமைப்பாகும்.

மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் 7-வது வழக்கு – கூலித் தொழிலாளி கைது

தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் உள்ளூர் மசாலா நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்பட்ட 300 கிலோ போலி மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூடுதல் மாஜிஸ்ட்ரேட் பிரேம் பிரகாஷ் மீனா கூறியுள்ளார். போலி மசாலாவை தயாரிக்க கழுதை சாணங்கள், வைக்கோல், சாப்பிட தகுதியற்ற வண்ணங்கள், அமிலங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன என்று சோதனையின் போது கண்டறியப்பட்டுள்ளது. போலியாக தயாரிக்கப்பட்ட மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்தூள், கொத்தமல்லித்தூள் கரம் மசாலா ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

போலி மசாலா பொருட்களின் 27-க்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன, இதன் ஆய்வு அறிக்கைகள் வந்தவுடன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று மாஜிஸ்ட்ரேட் கூறியுள்ளார். இதைடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேம் பிரகாஷ் மீனா அந்தப் பகுதியில் தொழிற்சாலையை நடத்துவதற்கான உரிமும் கூட அனூப் வர்ஷ்னியிடம் இல்லை என்று கூறியுள்ளார்.

மசாலா பொருட்களில் நடந்துள்ள கலப்படம் குறித்து உணவுத்துறை அதிகாரிகள், நீண்ட காலத்திற்கு இந்த மசாலா பொருட்களை உட்கொண்டவர்களின் உடல் நலத்திற்கு கடும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளனர். இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 151-ன் கீழ் அனூப் வர்ஷ்னி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்