Aran Sei

கோயிலுக்குச் சென்ற பெண் : பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பூசாரி : உத்தர பிரதேசத்தில் கொடூரம்

credits : the indian express

பாரதிய ஜனதா கட்சியின் யோகி ஆதித்யநாத் ஆளும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் கோயிலுக்குச் சென்ற 50 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 3-ம் தேதி, பதாவன் மாவட்டத்தின் உகாய்தி எனும் பகுதியில் உள்ள கோயிலுக்கு பிரார்த்தனை செய்வதற்காக அங்கன்வாடி ஊழியரான 50 வயது பெண் சென்றுள்ளார். கோயிலுக்குச் சென்ற அவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் குடும்ப உறுப்பினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அந்தக் கோயிலின் பூசாரி மற்றும் இருவர்,  இறந்த உடலை அப்பெண்ணின் வீட்டில் ஒப்படைத்துவிட்டு அவசரமாக அங்கிருந்து சென்றதாக மரணமடைந்தவரின் மகன் தெரிவித்ததாக  இந்தியா டுடே செய்தி பதிவிட்டுள்ளது.

வன்கொடுமை வழக்கை விசாரிக்கவில்லையென குற்றச்ச்சாட்டு : ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பணியிட மாற்றம்

இறந்தவரின் மகன் கூறிய கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கூறிய கோயில் பூசாரி, அந்தப் பெண் கிணற்றில் தவறி விழுந்துவிட்டதாகவும், அவர் உதவி கேட்டு சத்தம் எழுப்பியதையடுத்து  இவரும் உடன் இருந்த இருவரும் சென்று காப்பாற்ற முயன்றதாக கூறியுள்ளார். மேலும், அந்தப் பெண்ணினுடைய குடும்ப உறவினர்கள் தொலைபேசி எண் இல்லாததால் அவர் உடலை அவருடைய வீட்டில் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

பாலியல் குற்றவாளியைத் தண்டிக்கப், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியே போதும் – உச்ச நீதிமன்றம்

அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் கோயில் பூசாரி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையும் மிகவும் காலம் தாழ்த்தியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

பாலியல் வழக்கைப் பதிவு செய்ய 800 கி.மீ பயணித்த இளம் பெண்

இந்நிலையில், காவல்துறை அந்தப் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியதையடுத்து வெளியான அறிக்கையில் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பரிசோதனை முடிவில் பெண்ணின் தனிப்பட்ட உறுப்புகளில் காயங்கள் இருப்பதும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளதாக என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

‘ பாலியல் குற்றவாளி ‘ கிருபானந்தன் விடுதலை – நீதிமன்ற வளாகத்தில் போராட்டம்

அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்ததாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்