Aran Sei

கோயிலுக்குச் சென்றவரைப் பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி: தலைமறைவானவரை கைது செய்தது காவல்துறை

credits : the wire

உத்தர பிரதேசத்தில், கோயிலுக்குச் சென்ற 50 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முதன்மை குற்றவாளியான கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 3-ம் தேதி, பதாவன் மாவட்டத்தின் உகாய்தி எனும் பகுதியில் உள்ள கோயிலுக்கு பிரார்த்தனை செய்வதற்காக சென்ற அங்கன்வாடி ஊழியரான 50 வயது பெண் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் குடும்ப உறுப்பினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அந்தக் கோயிலின் பூசாரி மற்றும் இருவர்,  இறந்த உடலை அப்பெண்ணின் வீட்டில் ஒப்படைத்துவிட்டு அவசரமாக அங்கிருந்து சென்றதாக மரணமடைந்தவரின் மகன் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி பதிவிட்டுள்ளது

.

கோயிலுக்குச் சென்ற பெண் : பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பூசாரி : உத்தர பிரதேசத்தில் கொடூரம்

இந்த வழக்கில், உடனடியாகப் புகாரைப் பதிவு செய்யாத காவல்துறையினர், அப்பெண் இறந்து இரண்டு நாட்களுக்குப் பின், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

’ஹத்ராஸ்’ வன்கொடுமை வழக்கு – துயரத்தின் மேல் படியும் துயரம்

பிரேத பரிசோதனையில், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவரின் கால் மற்றும் மார்பு எழுலும்புகள் முறிந்திருப்பதும், அவருடைய பிறப்புறுப்பில் காயங்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

‘பெண்கள் இரவில் தனியாக வெளியே செல்லக் கூடாது’ – பாலியல் வன்கொடுமை குறித்து தேசிய மகளிர் ஆணையம் கருத்து

இதைத்தொடர்ந்து, பூசாரியின் உதவியாளர்களான வேத்ராம், ஜஸ்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் முதன்மை குற்றவாளியான தலைமை பூசாரி தலைமறைவாகிவிட்டதால் காவல்துறையினர் அவரை தேடி வந்துள்ளனர். இதுகுறித்து விசாரிப்பதற்காக தேசிய மகளிர் ஆணையத்தின் இரண்டு உறுப்பினர்கள், பதாவன் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வன்கொடுமை வழக்கை விசாரிக்கவில்லையென குற்றச்ச்சாட்டு : ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பணியிட மாற்றம்

பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக கருதப்படும் இடத்தைப் பார்வையிட்டுள்ள அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தையும், கைது செய்யப்பட்ட ஜஸ்பாலின் குடும்பத்தையும் சந்தித்துள்ளதாக தி வயர்  செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இரண்டு உறுப்பினர்களில் ஒருவரான சந்திரமுகி தேவி “எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும், ஒரு பெண் நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும், அத்துடன் இரவில் தனியாக வெளியே செல்லக் கூடாது. அந்தப் பெண் மாலை நேரத்தில் தனியாக வெளியே செல்லாமல் இருந்திருந்தால், அல்லது குடும்ப உறுப்பினர் துணையுடன் வெளியே சென்றிருந்தால், அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

சந்திரமுகி தேவியின் இந்தக் கருத்து, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மாவின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ரேகா ஷர்மா “எங்கள் உறுப்பினர் ஏன் அவ்வாறு கூறியுள்ளார் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணுக்கு, அவர் நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்தில் செல்ல உரிமை உள்ளது. பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இந்தச் சமூகம் மற்றும் அரசுகளின் கடமையாகும்” என்று கூறியுள்ளார்.

பாஜக அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டு – திடீரென மறுக்கும் மாணவி

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரி குமார் பிரஷாந்த், முதன்மை குற்றவாளியான கோயில் பூசாரியை அவருடைய ஆதரவாளர் வீட்டில் ஒளிந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அவர் தற்போது காவல்துறையால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்