Aran Sei

துணை காவல் ஆய்வாளர் மகன் மீது புகாரளித்தவர் மர்ம மரணம் – காவல்துறை உடந்தை என குடும்ப உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

தன்னுடைய மகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன் கான்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்த பெண்ணின் தந்தை, இன்று விபத்தில் மரணமடைந்துள்ளதாக என்டிடிவி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது

கடந்த மார்ச் 1 அன்று உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில், தீபு யாதவ், சவுரப் யாதவ், கோலு யாதவ் ஆகிய மூன்று பேர் 13 வயது சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் தந்தை உடனடியாக கான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, கூட்டுப் பாலியல் வன்புணர்வு மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

மதமாற்ற தடைச் சட்டத்தால் 17 வயது சிறுவன் கைது: அரசியலமைப்பை மீறுகிறதா உத்தர பிரதேசம்?

”பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தச் சிறுமி நலமாக இருக்கிறார். இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது” என்று மூத்த காவல்துறை அதிகாரி பிரிஜேஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்திருந்தார்.

உத்தர பிரதேசம் – டெல்லிக்குச் செல்ல தடுக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியல்

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முதல் இரண்டு குற்றவாளிகளின் தந்தை (தீபு யாதவ், சவுரப் யாதவ்) கன்னோஜ் மாவட்டத்தின் (கான்பூருக்கு அருகில் இருக்கும் மாவட்டம்) துணை காவல் ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேசம் – போராடும் விவசாயத் தலைவர்களுக்கு ரூ 50 லட்சம் நோட்டீஸ்

இந்நிலையில், தன்னுடைய பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக கான்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்த பெண்ணின் தந்தை, இன்று லாரி மோதிய விபத்தில் மரணமடைந்துள்ளதாக என்டிடிவி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மரணமடைந்தவரின் குடும்ப உறுப்பினர்கள்,  ”நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கூட, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நபரின் மூத்த சகோதரனால் கடுமையாக மிரட்டப்பட்டோம். என்னுடை தந்தை துணை காவல் ஆய்வாளர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று மிரட்டியதாக குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்திற்கு, காவல்துறையும் உடந்தை, எனவும் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

”அந்தப் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தேநீர் அருந்துவதற்காக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பெண்ணின் தந்தை லாரி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறோம்” என்று கான்பூர் தலைமை காவலர் பீரிதீந்தர் சிங் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்