Aran Sei

உத்தரபிரதேசம்: மசூதியின் முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டிய சாமியார் – 11 நாட்களுக்குப் பிறகு கைது செய்த காவல்துறை

த்தரபிரதேசத்தின் கைராபாத் நகரத்தில் நவராத்திரி விழாவையொட்டி ஊர்வலம் செல்லும் போது மசூதிக்கு முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டிய பஜ்ரங் முனி தாஸ் என்ற சாமியாரை 11 நாட்களுக்குப் பிறகு காவல்துறை கைது செய்துள்ளது.

உத்தரபிரதேசம்: ‘உங்கள் சமூக பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன்’ – மசூதிக்கு முன்பு காவி உடை அணிந்த சாமியார் மிரட்டல்

ஏப்ரல் 2 ஆம் தேதி நடந்த நவராத்திரி ஊர்வலம் ஒரு மசூதிக்கு அருகே சென்றபோது பஜ்ரங் முனி தாஸ் என்கிற சாமியார் ஒலிபெருக்கியில் வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்தக் காணொளியில் சாமியாரைச் சுற்றி இருப்பவர்கள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடுகின்றனர்.

அந்தக் காணொளியில் “கைராபாத்தில் நீங்கள் ஒரு இந்துப் பெண்ணை நீங்கள் கேலி செய்தால், நான் உங்கள் மகளையும் மருமகளையும் வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து வெளிப்படையாகப் பாலியல் வன்புணர்வு செய்வேன்” என்று பஜ்ரங் முனி தாஸ் என்ற சாமியார் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாகத் தேசிய மகளிர் ஆணையம் கூட கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தது. குற்றம் சாட்டப்பட்ட சாமியாரை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரபிரதேச காவல்துறைக்குக் கடிதம் ஒன்றையும் தேசிய மகளிர் ஆணையம் எழுதியிருந்தது.

இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதாக மிரட்டிய சாமியாரை கைது செய்யுங்கள் – அகில இந்திய மாணவர் கழகம் போராட்டம்

இதனையடுத்து சாமியார் பஜ்ரங் முனி தாஸ் மீது இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வெறுப்புப் பேச்சு, பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 11 நாட்களுக்குப் பிறகு நேற்று (ஏப்ரல் 13) சாமியார் பஜ்ரங் முனி தாஸை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Source : NDTV

தமிழ்நாட்டை கலவரக்காடாக ஆக்க துடிக்கும் H Raja…… பியூஷ் மனுஷ் நேர்காணல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்