மேற்கு உத்திரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் நேற்று (மே 23) பிற்பகல் இறைச்சி வியாபாரம் செய்யும் முகமது ஷகிர் என்ற இளைஞர், பசுக் காவலர்கள் என்று அழைத்துக் கொள்ளப்பட்டவர்களால் தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் சகோதரர் அளித்த புகாரின் பெயரில், தாக்குதல் நடத்தியவர்கள்மீது உத்திரபிரதேச காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர் முகமது ஷகீர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முகமது ஷகிர் மீது ”ஒரு விலங்கைக் கொல்வதன் மூலம் தவறு செய்தல், தொற்று நோய் பரவும் வகையில் செயல்படுதல், கொரோனா ஊடரடங்கு வழிகாட்டுதல்களை மீறுதல்” ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த காவல்துறை மூத்த அதிகாரி, ஷகிர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் அவருக்கு எதிராக பதியப்பட்டிருக்கு பிரிவுகள் பிணையில் வெளிவரக்கூடியவை என்பதால், சிறையில் அடைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
”ஒரு இறைச்சி விற்பனையாளர் தாக்கப்பட்டு காணொளி எங்களுக்குக் கிடைக்கப்பெற்றது. நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். ஐந்து முதல் ஆறு குற்றவாளிகள் பெயரிடப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைத் தேடி வருகிறோம் விரைவில் அவர்களைக் கைது செய்வோம்” என மொராதாபாத் காவல்துறை அதிகாரி பிரபாகர் சவுத்ரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனாவால் இறந்தவர்களின் உடலைக் கண்ணியத்தோடு நடத்தவேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தொண்டுநிறுவனம் மனு
முக்கிய குற்றவாளியான மனோஜ் தாக்கூரை இன்னும் காவல்துறையினர் கைது செய்யவில்லை. இறைச்சி வியாபாரி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அப்பகுதி சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி. ஹசன், “தொழிற்சாலையில் இருந்து இறைச்சி வாங்கிய ரசீது வைத்திருந்தும் அவர் தாக்கப்பட்டுள்ளார். பசுவதை என்ற பெயரில் நடக்கும் இது போன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும். இந்த மனிதர் கொல்லப்பாடமல் இருந்தது கடவுளின் கருணை” என தெரிவித்துள்ளார்.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.