Aran Sei

லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

credits : indian express

உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் காவல்துறையினர் இஸ்லாமிய ஆண் இந்து பெண்ணை மதமாற்றம் செய்து திருமணம் செய்வதாகக் கிடைத்த தொலைபேசி தகவலின் அடிப்படையில், திருமணத்தைத் தடுத்து நிறுத்தி அவர்களைக் கைது செய்துள்ளனர். திருமணம் செய்த இருவரும் இஸ்லாமியர்கள் எனத் தெரிந்த பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

கறுப்புச் சட்டத்தில் நடக்கும் வேட்டை – லவ் ஜிகாத் என்ற பெயரில் 7 பேர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (7-12-20) ஷபீலா மற்றும் ஹய்தர் அலி திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணம் முடிந்த பிறகு ஒரு சிறிய வரவேற்பு நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. வரவேற்பு நிகழ்ச்சி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே காவல்துறையினர் இடைமறித்துள்ளனர். பின்னர், திருமண தம்பதியர் இருவரையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

”காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நான் அவர்களிடம் பேச முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் என்னைக் கடுமையாகத் தாக்கினர். இரவு முழுவதும் என்னை பெல்ட்டால் அடித்துச் சித்திரவதை செய்தனர். என்னுடைய அழுகுரலைக் கேட்டு ஷபீலா மிகவும் பயந்துவிட்டாள். ஷபீலாவிடம் அவரின் குடும்ப விவரங்களைக் கேட்டுக் காவல்துறையினர் மிரட்டினர்” என ஹய்தர் அலி குற்றம் சாட்டியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உபி : லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் கைது

”பின்னர் ஷபீலாவின் வீட்டுக்குத் தொலைபேசி வாயிலாக அழைத்து காவல்துறையினர் அவரின் ஆதார் அட்டை புகைப்படத்தைப் பார்த்து இஸ்லாமியர் என உறுதி செய்யப்பட்ட பிறகும் எங்களை விடுவிக்கவில்லை. ஷபீலாவின் சகோதரர் மறுநாள் காலை அசம்கரில் இருந்து குஷிநகருக்கு (ஏறக்குறைய 150 கிமீ) நேரில் வந்து திருமணத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை என்று கூறிய பிறகே விடுவிக்கப்பட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அசம்கரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து வெளி வந்த ஷபீலாவை திருமணம் செய்துகொள்வதற்கு உதவ ஹய்தர் அலி தன்னை அணுகியதாக உள்ளூர் சமூக ஆர்வலர் அர்மான் கான் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருமணம் நடைபெறுவதற்கு முன்பு, சில ”இந்து யுவ வாகினி உறுப்பினர்கள்” திருமணத் தம்பதியிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

`லவ் ஜிகாத் தடைச் சட்டம் நீதியை மீறும் செயல்’ – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

ஹய்தர் அலியின் கிராமத்தின் ஊர்க்காவலாளியான முஷ்டகீம் அலி சில இந்து அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் ல்வ் ஜிகாத் திருமணம் நடப்பதாகக்  காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.

அலி மீதான வன்முறைக் குற்றச்சாட்டுகளைக் காவல்துறை மறுத்துள்ளது ” அவரை அடித்து சித்திரவதை செய்வதற்கான எந்தத் தேவையும் இல்லை” என்று குஷினகர் எஸ்.பி வினோத் குமார் சிங் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு சந்தேகத்திற்குரிய நபரை (அல்லது வேறு யாரையும்) காவல்துறையினர் தாக்க அனுமதிக்கும் எந்தச் சட்டமும் இந்தியாவில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தில் முதல் வழக்குப் பதிவு : யோகி அரசு

லவ் ஜிஹாத் வதந்தியைப் பரப்பியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்று கேட்டபோது, தகவல் தவறாக இருந்தாலும் அவர் மீது வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்