Aran Sei

உத்தரபிரதேசம்: ‘உங்கள் சமூக பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன்’ – மசூதிக்கு முன்பு காவி உடை அணிந்த சாமியார் மிரட்டல்

த்தரப்பிரதேசத்தின் கைராபாத் நகரத்தில் நவராத்திரி விழாவையொட்டி ஊர்வலம் செல்லும் போது மசூதிக்கு முன்பு உங்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று காவி உடை அணிந்த சாமியார் ஒருவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கர்நாடகா: இஸ்லாமிய மாம்பழ வியாபாரிகளைக் குறிவைக்கும் இந்துத்துவ வலதுசாரி அமைப்பினர்

ஏப்ரல் 2 ஆம் தேதி நடந்த நவராத்திரி ஊர்வலம் ஒரு மசூதிக்கு அருகே சென்றபோது பஜ்ரங் முனி தாஸ் என்கிற சாமியார் ஒலிபெருக்கியில் வெறுப்புப் பேச்சுகளைப் பேசத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த காணொளியின் இடையே சுற்றி இருந்தவர்கள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடுவதையும் கேட்கமுடிகிறது.

அதில், “கைராபாத்தில் நீங்கள் ஒரு இந்துப் பெண்ணை நீங்கள் கேலி செய்தால், நான் உங்கள் மகளையும் மருமகளையும் வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து வெளிப்படையாக பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று பஜ்ரங் முனி தாஸ் என்ற சாமியார் அந்த காணொளியில் பேசியுள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் – விவாதிக்க மறுத்த மாநிலங்களவை தலைவர்

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து இது சம்பந்தமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source : newindianexpress

நடிகர் விஜய் குறித்து ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் கருத்துக்கு எதிர்வினை. 

நல்லா உருட்டுறீங்க பாண்டே…. மேலும் தெரிந்து கொள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்