Aran Sei

கயன்வாபி மசூதிக்குச் சொந்தமான நிலம்: காசி விஷ்வநாத் ஆலயநிர்வாகத்திடம் ஒப்படைப்பு

வாரணாசியில் உள்ள கயன்வாபி மசூதியை நிர்வகிக்கும் குழுவானது மசூதிக்கு வெளியே உள்ள 1,700 சதுர அடி நிலத்தை காசி விஷ்வநாத் கோவில் நிர்வாகத்திற்கு அளித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காசி விஷ்வநாத் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான 1,000 சதுர அடி நிலத்திற்காகப் பரிமாற்றத்தின் அடிப்படையில் இந்த நிலம் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு-உச்சநீதிமன்றத்தில் 68,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்

இதுகுறித்து தெரிவித்துள்ள காசி விஷ்வநாத் கோவில் நிர்வாகத்தின் முதன்மை சிறப்பு அதிகாரி சுனில் வர்மா,”இந்த இரண்டு நிலங்களும் ஒரே மதிப்புடையவை. கோவிலுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது. இவை விற்கப்படவில்லை. அதற்குப் பதிலாக அதற்கு ஒத்த மதிப்புடைய நிலம் வக்பு வாரியத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வாரணாசி நீதிமன்றம், காசி விஷ்வநாத் கோவில் மற்றும் கயன்வாபி மசூதி இடையேயான 10 ஆண்டுகள் பழமையான நிலப்பிரச்சனையை தீர்த்து வைக்க உத்தரவிட்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘உபா சட்டத்தை அரசு தவறாக பயன்படுத்துவதால் பலர் சிறைகளிலேயே வாழ்வை இழக்கின்றனர்’ – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள்

தற்போது கயன்வாபி மசூதியுள்ள இடம் காசி விஷ்வநாத் கோவிலுக்குச் சொந்தமானது என்று கூறி மறுசீரமைப்பு செய்தி தர வேண்டுமென 1991 ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கடந்த மார்ச் 15 அன்று, தற்போது கயன்வாபி மசூதியுள்ள இடத்தில் பண்டைய கோவிலை மீண்டும் மறுசீரமைத்து தரவேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்