Aran Sei

கன்வார் யாத்திரையை ரத்து – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பணிந்த உ.பி. அரசு

த்தரபிரதேசத்தில்  கன்வார் யாத்திரை நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டுமென  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டப் பிறகு அம்மாநில அரசு  அந்த யாத்திரையை ரத்து செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா காலத்திலும் கன்வார் யாத்திரை நடத்த அறிவிப்பு வெளியிட்டிருந்த அம்மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக நீதிபதி ஆர் எஃப் நாரிமன் மற்றும் பி ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு  ஒன்றிய அரசு, உத்தர பிரதேசம்   மற்றும் உத்தரகண்ட் மாநில அரசுகள்  பதிலளிக்க வேண்டுமென கோரியிருந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

‘நீட் தேர்வால் தமிழ் வழி மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு செல்வது குறைந்துள்ளது’ – சமத்துவ டாக்டர்கள் சங்கம்

இந்நிலையில்,கடந்த ஜூலை 16 அன்று உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “குறீயிடாகவே கன்வார் யாத்திரை நடைபெறும், அது வரும் ஜூலை 25 அன்று தொடங்கும்” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.

மேலும், ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , “கன்வார் யாத்திரைக்கு அனுமதிப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட இடங்களில் பக்தர்கள் கங்கை நீர் எடுக்க வசதி செய்யப்படும்” என்றும் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

‘உச்சநீதிமன்ற ஆணைப்படி சிறைவாசிகளுக்குப் பிணை வழங்குக’- தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

இதுகுறித்து தெரிவித்துள்ள உத்தரகண்ட் மாநில முதலமைச்சர், “மனித வாழ்க்கைக்கு உச்சபட்ச முன்னுரிமை அளித்து, நாங்கள் யாத்திரையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்.  கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் குறித்து நிறைய விவாதங்கள் நடத்தப்பட்டன. எங்கள் அதிகாரிகள் அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஹரித்வார் தொற்றுநோயின் மையமாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை… மக்களின் வாழ்க்கைதான் எங்களுக்கு முதன்மை. அதனுடன் எங்களால் விளையாட முடியாது ” என்று குறிப்பிட்டுள்ளதாகவும்  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்