ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தரபிரதேச அரசு “அம்பலப்படுத்தப்பட்டுள்ளது” எனவும், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கானுக்கு எதிராகத் தொடரப்பட்ட “பொய்யான வழக்குகளிலும்” இதே போல் அரசு அம்பலப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக உத்தரபிரதேச காவல்துறை உயர் அதிகாரிகள் தடயவியல் சோதனைகளில் பாலியல் வன்கொடுமைக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறினர். தற்போது, சிபிஐ அவர்கள் கூறியதற்கு எதிர்மாறாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
जिस प्रकार हाथरस कांड में भाजपा सरकार के झूठ की पोल खुली है उससे उप्र में झूठे मुक़दमों की कलई खुलनी शुरू हो गयी है। न्यायपालिका व लोकतंत्र में विश्वास रखते हुए हमें पूरा भरोसा है कि आज़म ख़ान साहब के झूठे मुक़दमे भी हारेंगे और उन्हें बहुत जल्द इंसाफ़ मिलेगा।#नहीं_चाहिए_भाजपा pic.twitter.com/PCd1pnh962
— Akhilesh Yadav (@yadavakhilesh) December 21, 2020
இதுகுறித்து, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், “ஹத்ராஸ் சம்பவத்தில் பாஜக அரசின் பொய்கள் அம்பலப்படுத்தப்பட்டது போல், உத்தரபிரதேசத்தில் பொய்யான வழக்குகளை அம்பலப்படுத்தும் செயல்முறை ஆரம்பித்துவிட்டது. நீதித்துறை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளதால், அசாம் கானுக்கு எதிராகத் தொடரப்பட்ட பொய்யான வழக்குகளிலும் அரசு தோற்கும் என்றும், அவருக்கு விரைவில் நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
அசாம் கான், ராம்பூர் மக்களை தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக வெற்றி பெற்றவர். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக, அவரது மகன் அப்துல்லா தயாரித்த போலி பிறப்புச் சான்றிதழ் தொடர்பான வழக்கில், அசாம் கான் சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அசாம் கான் மீது மேலும் பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில், அவர் நடத்திவரும் முகமது அலி ஜௌஹர் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள நிலங்களை ஆக்கிரமித்ததாக குற்றம்சாட்டப்படும் வழக்கும் அடங்கும்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.