Aran Sei

உத்தர பிரதேசத்தில் சாதிய பாகுபாடு : ஊர் குழாயில் தண்ணீர் பிடித்ததற்காகத் தாக்கப்பட்ட தலித்

Image Credits: The Wire

த்தர பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 45 வயதான ராம்சந்திர ரைதாஸ் என்கிற பட்டியல் சாதி நபர் தாக்கப்பட்டுள்ளார். அரசால் நிறுவப்பட்ட தண்ணீர் குழையை (hand pump) அவர் பயன்படுத்தியதால் அவர் தாக்கப்பட்டதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாகப் பிசாண்டா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. “ராம் தயால் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் தடியால் தாக்கியதாக ராம்சந்திர ரைதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இங்குள்ள டெண்டுரா கிராமத்தில் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்ற போது அவர் தாக்கப்பட்டுள்ளார்” என்று காவல் நிலைய அதிகாரி நரேந்திர பிரதாப் சிங் கூறியுள்ளார்.

முசாபர்நகர் கலவரம்: பாஜக தலைவர்கள் மீதான வழக்கு – வாபஸ் பெற முயலும் ஆதித்யநாத் அரசு

“இந்தத் தாக்குதலில் ராம்சந்திர ரைதாஸ் காயம் அடைந்துள்ளார். எனவே, அவர் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று நரேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

“இரண்டு மாதங்களுக்கு முன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்ணீர் குழையை பயன்படுத்தத் தடை விதித்ததாக ராம்சந்திர ரைதாஸ் கூறினார். இது யாதவ சமூக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் அதர்ராவின் துணைப் பிரிவு நீதிபதி இதில் தலையிட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தீர்க்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்” என்றும் நரேந்திர பிரதாப் சிங் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்