உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக காவல்துறையினரால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வீட்டுக்காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உன்னாவ் மாவட்டம் பங்காருமாவ் நகரில் வீட்டு வாசலில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்த சிறுவனைக் காவல்துறையினர் உள்ளூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பிரதமரின் கண்ணீரை முதலை கண்ணீருடன் ஒப்பிடாதீர்கள்; முதலைகள் பாவம் – தி டெலிகிராப்
தாக்குதலில் சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டடார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாக சிறுவனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
காவல்துறையினரின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், லக்னோ சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுப்பதோடு, உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
”இந்த விவகாரத்தில் இரண்டு காவலர்கள் மற்றும் ஒரு வீட்டு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், முழு விசாரணை மேற்கொள்ளப்படும்” என உன்னாவ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
थाना बांगरमऊ क्षेत्रांतर्गत युवक की मृत्यु हो जाने के संदर्भ में संबन्धित के विरुद्ध की गई कार्यवाही के विषय में अपर पुलिस अधीक्षक उन्नाव द्वारा दी गई बाइट @Uppolice @dgpup @adgzonelucknow @Igrangelucknow pic.twitter.com/2TCyvaZMp7
— UNNAO POLICE (@unnaopolice) May 21, 2021
கொரோனா பரவலை தடுக்க உத்திரபிரதேச மாநிலத்தில் காலை 7 மணிவரை ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.