Aran Sei

கொரோனாவை விரட்ட விமான நிலையத்தில் பூஜை: பாஜக அமைச்சர் தலைமையில் ஊழியர்கள் பங்கேற்பு

கொரோனா வைரஸை விரட்ட பாஜக கட்சியைச் சேர்ந்த மத்தியபிரதேச சுற்றுலா துறை அமைச்சர் உஷா தாக்கூர் பூஜை நடத்தியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மத்தியபிரதேச மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் உஷா தாக்கூர் கொரோனா வைரஸை விரட்ட இந்தோர் விமான நிலையத்தில் உள்ள தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் சிலை முன்பு பூஜையில் ஈடுபட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒதுக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் – குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவு

மேலும், இந்தப் பூஜையின்போது விமான நிலைய இயக்குநரும், பணியாளர்களும் அமைச்சருடன் ஈடுபட்டுள்ளதாக என்டிடிவி  செய்தி கூறுகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்நிலையில் விமான நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் அமைச்சர் கைகளைத் தட்டி, பாட்டு பாடி பஜனையில் ஈடுபட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பீகாரில் விசாயிகள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் – 2 மாதங்களாக அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை

இந்நிலையில், முகக்கவசம் அணியாதது குறித்து உஷா தாக்கூரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “தினமும் ஹோமம் வளர்த்துக் கடவுளை வணங்கும்போது முகக்கவசம் அணிவதில்லை” என்று கூறியுள்ளதாகவும் என்டிடிவி  செய்தி கூறுகிறது.

இதற்கு முன்னர் மத்தியபிரதேச சுற்றுலா துறை அமைச்சர் உஷா தாக்கூர் ” சாண வறட்டியை எரித்து ஹோமம் வளர்த்தல் வீடு 12 மணிநேரங்களுக்கு சுத்தமடையும் ” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்