Aran Sei

விவசாயிகள் போராட்டம் – கட்சியிலிருந்து இருந்து விலகிய உத்தரபிரதேச பாஜகவின் பெண் தலைவர்

த்தரபிரதேச பாஜக தலைவர்களின் ஒருவரான பிரியம்வதா தோமர், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், உத்தரபிரதேச பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 7), பாஜகவின் உத்தரபிரதேச மாநில தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்கு அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில்,  “மத்திய மற்றும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான அரசானது, மூன்று விவசாயச் சட்டங்களை நீக்க கோரும் விவசாயிகளின் கோரிக்கையையும், நான்கு மாதங்களுக்கு மேலாக தொடரும் அவர்களின் போராட்டத்தையும் புறக்கணித்து வருகின்றன.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

‘விவசாயிகள் போராட்டம் தீவிரமடைவதால், லக்னோவில் ஏப்ரல் 5 வரை ஊரடங்கு’ – உத்தரபிரதேச காவல்துறை அறிவிப்பு

பாஜகவின் விவசாயிகள் விரோதக் கொள்கையின் காரணமாக தான் இந்த முடிவை எடுத்தேன் என்றும் உத்தரபிரதேசத்தில் பெண்களை பாஜக புறக்கணித்ததோடு, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் பிரியம்வதா தோமர் தெரிவித்துள்ளார்.

விரைவில், உத்தரபிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்